வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

வாழ்வாதாரத்தை பறிக்கும் அரசாணையை எதிர்த்து பொறியாளர்கள் போராட்டம்

சென்னை,பிப்.15-
ஒருநபர்குழு பரிந்துரைத்து இன்றளவும் பெற்று வரும் ஊதியத்தின் அடிப்படையில் 7வது ஊதியக்குழு ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு பொறியாளர் கூட்டமைப்பு சார்பில் சென்னை அரசு விருந்தினர் மாளிகை அருகில் வியாழனன்று (பிப்.15) மாபெரும் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.காலங்காலமாக இருந்து வந்தது போன்று போக்குவரத்துக்கழகங்கள், வாரியங்களில் பணியாற்றும் பட்டதாரிப் பொறியாளர்களுக்கு அரசுத்துறைப் பொறியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும், காலமுறை பதவி வழங்க வேண்டும், பொறியியல் சீராய் வுக்குழு அமைக்க வேண்டும், ஊரக வளர்ச்சித்துறையில் தலைமைப் பொறியாளர்கள் தலைமையில் முறையான பொறியியல் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என் பன உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுத்துறைகள், வாரியங்கள், போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் பட்டதாரிப் பொறியாளர்களுக் கான பொதுஅமைப்பாக விளங்கும் தமிழ்நாடு பொறியாளர் கூட்டமைப்பு மாநில அளவில் இந்த போராட்டத்தை நடத்தியது.கூட்டமைப்பின் நிர்வாகிகள் பேசுகையில், அரசுத் துறைகளில் பணியாற்றும் பட்டதாரிப் பொறியாளர்களுக்கு 7வது ஊதியக்குழு ஊதிய விகிதங்கள் இதுவரை அமலாக்கப்படவில்லை, போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் பொறியாளர்களுக்கு அரசுத்துறைகளில் பத்தாம் வகுப்புக் கல்வித்தகுதி மட்டும் பெற்றவர்கள் வாங்கும் ஊதியத்தை விடவும் குறைவாகவே உள்ளது. பொறியாளர்களுக்கிடையே பணிச் சுமையை நியாயமான வகையில் பகிர்ந்தளிக்க வைக்கப்பட்ட மறுசீரமைப்பு கோரிக்கை கேட்பாரற்றுக் கிடக்கிறது. ரூ 20 ஆயிரம் கோடிக்கு மேல் நிதி ஒதுக் கீடு பெறும் ஊரக வளர்ச்சித் துறையில் மத்திய அரசு கேட்டுக் கொண்டது போல் தலைமைப் பொறியாளர் பதவியை உருவாக்கி பொறியியல் கட்டமைப்பினைமுறைப்படுத்தவேண்டும் என பலமுறை முறையிட்டும் அரசு நிர்வாகங்கள் செவிசாய்க்கவில்லை. சில துறைகளில், வாரியங்களில் தாங்கமுடியாத பணிச்சுமை வழங்கப் படுகிறது. குறிப்பாக ஊரக வளர்ச்சித்துறையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மிகுந்த பணிச்சுமைக்காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத் தினால் 5 இளம் பொறியாளர் கள் இறந்தனர். பிற துறைகளில் இதைவிட நிலைமை மோசமாக உள்ளது.எனவே பொறியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் அரசாணை 328ஐ உடனே ரத்து செய்யவேண்டும் எனவும் கோரிக்கைகள் குறித்து நிர் வாகிகளை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் எனவும்வலியுறுத்திஇந்த போராட்டம் நடப்பதாக கூறினர்.போராட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் எஸ்.ஆனந்த் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் என்.மதிமாறன், பொதுச்செயலாளர் கே.அன்பு, நிர்வாகிகள் எஸ்.பிரகாஷ், ஆர்.சிறினிவாசன், பி.டி.வி.சுரேஷ் குமார், அகிலஇந்திய பொறியாளர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் செய் யது, முன்னாள் தலைவர்கள் நாகராஜ், சான்சுரி, நெடுஞ் சாலைத்துறை பொறியாளர் சங்க நிர்வாகிகள் வெங்கடாச்சலம், தீபக் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

may 1

சோசலிசம் நீடூழி வாழ்க! இந்தியத் தொழிற்சங்க மையம் (சிஐடியு) மே தின அறிக்கை சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் சர்வதேச ஒருமைப்பாட்டு தினமா...