திங்கள், 30 ஏப்ரல், 2018

may 1


சோசலிசம் நீடூழி வாழ்க!
இந்தியத் தொழிற்சங்க மையம் (சிஐடியு) மே தின அறிக்கை

சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் சர்வதேச ஒருமைப்பாட்டு தினமான - மே தினமான இன்று,உலகம் முழுதும் தொழிற்சாலைகளிலும், அலுவலகங்களிலும், சேவைத்துறைகளிலும், சுரங்கங்களிலும், வனங்களிலும், நீர்நிலைகளிலும் பாடுபடும் பாட்டாளிகள் அனைவருக்கும், இந்தியத் தொழிற்சங்க மையம் (சிஐடியு) வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.மிகவும் கடுமையாகப் போராடி வென்ற தங்கள்உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, தங்களுடைய நிலைமைகளை மேலும் மேம்படுத்திக் கொள்வதற்காக, குறிப்பாக, உலகப் பொருளாதார நெருக்கடியின் காரணமாக ஏகாதிபத்தியத்தின் தலைமையில் சர்வதேச நிதிமூலதனத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் நவீன தாராளமய முதலாளித்துவக் கொள்கைகளுக்கு எதிராக, மக்கள் தங்களுடைய வாழ்வு மற்றும் வாழ்வாதாரங்களின் மீதுஏவியுள்ள தாக்குதல்களுக்கு எதிராக மற்றும் அனைத்துவிதமான சுரண்டல்களிலிருந்தும் தங்களை விடுவித்துக்கொள்வதற்காக மேற்கொண்டுவரும் அனைத்துவிதமான போராட்டங்களுக்கும் சிஐடியு தன்னுடைய ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக் கொள்கிறது.சோசலிசம் மீதும் மனிதனை மனிதன் சுரண்டுவதிலிருந்து சமூகத்தை விடுவிப்பதற்கான போராட்டத்தைத் தொடர்வதற்கும், தன்னுடைய உறுதிமொழியை சிஐடியுமீண்டும் வலியுறுத்திக் கூறிக்கொள்கிறது. அதேபோன்று சோசலிச நாடுகளில் உள்ள மக்கள் தங்களுடைய நாட்டில்சோசலிசத்தைப் பாதுகாப்பதற்காக மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கும் சிஐடியு தன்னுடைய ஒருமைப்பாட்டைத்தெரிவித்துக்கொள்கிறது.அந்நியர் தலையீடு இல்லாமல் தங்களுடைய அரசாங்கங்களை ஜனநாயக ரீதியாகத் தேர்வு செய்திட்ட அனைத்து நாட்டு மக்களின் உரிமைகளை சிஐடியு பாதுகாக்கிறது. ஆப்கானிஸ்தான், சிரியா, ஏமன்முதலான நாடுகளில் நடைபெற்றுவரும் யுத்தங்கள் மற்றும் ஏகாதிபத்தியத்தின் தலையீடுகள் மற்றும் இலத்தீன் அமெரிக்கா மற்றும் உலகின் பல நாடுகளில், இடது மற்றும் முற்போக்கு அரசாங்கங்களை அப்புறப்படுத்திட மேற்கொள்ளப்பட்டு வரும் அவற்றின் மேலாதிக்க சூழ்ச்சிகளையும் சிஐடியு கண்டனம் செய்கிறது. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தை சிஐடியுதன்னுடைய அனைத்து வல்லமையையும் கொண்டுஎதிர்த்துப்போரிடவும் சபதம் ஏற்கிறது. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் என்பது சுரண்டலுக்கு எதிரான வர்க்கப் போராட்டத்தின் பிரிக்க முடியாததொரு பகுதி என்பதையும் சிஐடியு உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறது.தங்கள் தாய்நாட்டிற்காக, பாலஸ்தீனர்கள் தொடர்ந்துநடத்திவரும் வீரஞ்செறிந்த போராட்டத்திற்கான ஒருமைப்பாட்டை சிஐடியு மீண்டும் வலியுறுத்திக் கூறிக்கொள்கிறது. பாலஸ்தீனத்தை 1967ஆம் ஆண்டிலிருந்த எல்லைகளுடன் ஒரு சுதந்திரமான இறையாண்மைமிக்க நாடாகவும் மற்றும் கிழக்கு ஜெருசேலத்தை அதன் தலைநகராகவும் அங்கீகரிக்க வேண்டும் என்றும் சிஐடியு கோருகிறது.
உழைக்கும் மக்களின் ரத்தத்தாலும், வியர்வையாலும் உற்பத்தி செய்யப்பட்டுள்ள உலக வளத்தில் பாதிக்குமேலான அளவினை உலகில் உள்ள 1 சதவீத பணக்காரர்கள், நவீன தாராளமயக் கொள்கையைப் பயன்படுத்தி, தங்களுக்குள் சுருட்டிக் கொண்டு, சமத்துவ மின்மையைஅதிகரித்துக்கொண்டிருப்பதை, இந்த வளத்தை உழைக்கும் மக்களின் மீதான சுரண்டலை அதிகரித்திருப்பதன் மூலமாக, கூட்டுக் களவாடல் முதலாளித்துவத்தின் மூலமாக, வரிகளைச் செலுத்தாது ஏமாற்றி, நிலங்கள், வனங்கள், சுரங்கங்கள், நீர்நிலைகள் என பொதுச் சொத்துக்களையும் இயற்கை வளங்களையும், அங்கே வாழ்ந்து வந்த ஏழை விவசாயிகள், பழங்குடியினர்கள் மற்றும் இதர மக்களையும் புலம்பெயரச் செய்துவிட்டு, சூறையாடி இருப்பதையும், சிஐடியு ஆழ்ந்த கவலையுடன் சுட்டிக்காட்டுகிறது.
உழைக்கும் மக்களின் எதிரிகள்
வலதுசாரி சக்திகள் தலைதூக்கியிருப்பது கண்டு சிஐடியு தன் திகைப்பை வெளிப்படுத்திக் கொள்கிறது. வலதுசாரி சக்திகளால் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு மாற்றத்தை அளித்திட முடியாது. மாறாக அவை, தொழிலாளர் வர்க்கத்தையும் உழைக்கும் மக்களையும் தேசிய இனங்கள், மதங்கள், பிராந்தியங்கள், சாதிகள், ஆண்-பெண் வேற்றுமை மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு வடிவங்களில் பிளவுபடுத்திடும் நடவடிக்கைகளில் இறங்கி இருக்கின்றன. குறிப்பாக, எங்கெல்லாம் சமூக ஜனநாயகவாதிகள் என்று தங்களைத் தாங்களே அழைத்துக்கொண்டு, நவீன தாராளமயக் கொள்கைகளை ஆதரித்ததன் மூலம் தொழிலாளி வர்க்கத்திற்கும் இடதுசாரி சக்திகளுக்கும் துரோகம் இழைத்தார்களோ, அந்த நாடுகளில் எல்லாம் இதனைமிகவும் தெளிவாகக் காண முடிந்தது. சர்வதேச நிதிமூலதனம் மற்றும் ஏகாதிபத்தியத்தால் மேம்படுத்தப்பட்டுள்ள வலதுசாரி சக்திகள் தங்கள் நாடுகளில் உள்ளபெரும் கார்ப்பரேட்டுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்குச் சேவகம் செய்வதற்காக உழைக்கும் மக்களின்ஒற்றுமையைப் பல்வேறு வழிகளிலும் சீர்குலைத்துக்கொண்டிருக்கின்றன. நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான அவர்களுடைய போராட்டங்களை பலவீனப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இவர்கள் உழைக்கும்மக்களின் விரோதிகள் என்று சிஐடியு உரத்து அறிவிக்கிறது.
வலதுசாரிகளை
தூக்கிப் பிடிக்கும் முதலாளிகள்
உலகப் பொருளாதார நெருக்கடி மிகவும் ஆழமாகியிருக்கக்கூடிய இன்றைய பின்னணியில், முதலாளிகள் தங்களுடைய கொள்ளைலாபங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, இன்றைய பொருளாதார நெருக்கடியிலும் தங்களுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாதவாறு தக்க வைத்துக் கொள்வதற்காக, வலதுசாரிகளையும், எதேச்சதிகார மற்றும் காட்டுமிராண்டித்தனமான சக்திகளையும் உயர்த்திப்பிடிக்க வேண்டியது அவசியமாகிறது. உலக சோசலிச முகாம் வலுவாக இல்லாததும் அவர்களுக்கு இதற்கான துணிவை அளித்திருக்கிறது.இன்றைய முதலாளித்துவ அமைப்பு, அறிவியல்மற்றும் தொழில்நுட்பத்தில் மக்கள் தங்கள் சுயநலத்திற்காக அல்லாது சமூகத்தின் பயன்பாட்டிற்காக, உருவாக்கியுள்ள அபரிமிதமான வளர்ச்சியை, மக்களுக்குப் பயன்படுத்தாமல், முதலாளித்துவ வளர்முகநாடுகளில் ஒருசிலவும் பெரும் கார்ப்பரேட்டுகளும் மற்றும்வர்த்தக நிறுவனங்களும் தங்களை வளப்படுத்திக் கொள்வதற்குப் பயன்படுத்திக் கொண்டிருப்பதானது அட்டூழியமான செயல் என்று சிஐடியு தெரிவித்துக் கொள்கிறது.வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, எழுத்தறிவின்மை, சுகாதாரமின்மை, வீட்டுவசதியின்மை மற்றும்இதர அடிப்படை வசதிகள் இல்லாமை ஆகிய அனைத்தையும் போக்கக்கூடிய விதத்தில் அனைத்துத் தேவையான வளங்களும் உள்ள போதிலும் பெரும்பான்மையான மக்களுக்கு அவற்றை வழங்காதது மட்டுமல்ல அவை மிகவும் மோசமான முறையில் அதிகரிக்கக்கூடிய நிலைஉருவாகியிருப்பதற்கும் முதலாளித்துவ அமைப்பே பொறுப்பேற்க வேண்டும் என்று சிஐடியு கூறுகிறது.
மேலும் மேலும் கொடூரமான...
அடாவடியான சுரண்டல்
பொருளாதார நெருக்கடி மேலும் மோசமாகிக் கொண்டிருக்கக்கூடிய பின்னணியில், முதலாளித்துவ அமைப்பு முறை, மேலும் கொடூரமானதாக, மேலும் அடாவடித்தனமாக, மேலும் காட்டுமிராண்டித்தனமாக தன்னுடைய சுரண்டல் குணத்தைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது என்பதைத் தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் கொண்டுசென்று அவர்களுக்கு விழிப்புணர்வினை உருவாக்கிட சிஐடியு சபதம் ஏற்கிறது. முதலாளித்துவ அமைப்புமுறையைத் தூக்கி எறிவதிலும், அனைத்துவிதமான சுரண்டலுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கான இறுதிப்போராட்டத்திற்குத் தயாராவதிலும் தொழிலாளர் வர்க்கத்திற்குள்ள பங்கினை உணரக்கூடிய விதத்தில் தொழிலாளர் வர்க்கத்தின் உணர்வுமட்டத்தை உயர்த்திட, சிஐடியு உறுதியேற்கிறது.உலகம் முழுதும் உள்ள தொழிலாளர் வர்க்கத்தை ஒற்றுமைப்படுத்திட உலக தொழிற்சங்கங்களின் சம்மேளனம்(WFTU-World Federation of Trade Unions)மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்திடுவதற்கும், சுரண்டும் தன்மையுடைய முதலாளித்துவ அமைப்பிற்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்துவதற்கும் உறுதி எடுத்துக்கொள்வதாக சிஐடியு உரத்து அறிவிக்கிறது.
பாஜக ஆட்சியின் மும்முனைத் தாக்குதல்
மே தினமான இன்று, சிஐடியு, நம் நாட்டில் உழைக்கும்மக்களின் மீது மும்முனைகளில் தாக்குதல் தொடுக்கப்பட்டிருப்பதை, ஆழ்ந்த எச்சரிக்கையுடன் தெரிவித்துக்கொள்கிறது. அதாவது, பாஜக ஆட்சியாளர்கள், நம்நாட்டின் தொழிலாளிகள் மற்றும் உழைக்கும் மக்களின்வாழ்நிலைமைகளில், நவீன தாராளமயத் தாக்குதல்களைத் தொடர்வது, ஆர்எஸ்எஸ்-உடன் இணைந்து மதவெறி மற்றும் சாதியவெறி சக்திகள் செல்வாக்கு பெற்று அரசாங்கம் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளையும் கைப்பற்றி மக்களைப் பிளவுபடுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியிருப்பது மற்றும் எதேச்சதிகாரம் அதிகரித்துக்கொண்டிருப்பது, சமூகத்தில் சகிப்பின்மை அதிகரித்துக்கொண்டிருப்பது மற்றும் பகுத்தறிவு மற்றும் அறிவியல் சிந்தனைகளை வளர்த்திட்ட பகுத்தறிவாளர்களையும் அறிவியலாளர்களையும், மற்றும் பாஜகவின் கொள்கைகளுக்கு எதிராகக் கருத்துக் கூறுபவர்களையும், பாஜகவின் கொள்கைகளை எதிர்ப்பவர்களையும் ‘தேச விரோதிகள்’ என்று முத்திரை குத்தி, தாக்குவது, தூற்றுவது, அச்சுறுத்துவது மற்றும் கொல்வது என்று மும்முனைகளில் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகின்றன என்று ஆழமானமுறையில் தொழிலாளர் வர்க்கத்தை சிஐடியு எச்சரிக்கிறது.சிஐடியு, நவீன தாராளமயக் கொள்கைகளின் விளைவாக அதிகரித்துவரும் வேலையில்லாத் திண்டாட்டம், வேலைகளின்மை, தொழில்துறையில் ஆழமாகி வரும் மந்தம், அதிகரித்துவரும் வறுமை, விவசாய நெருக்கடி, கிராமப்புற அவலநிலை மற்றும் தொடரும் விவசாயிகள் தற்கொலைகள், மிகவும் இழிவான முறையில் விரிவாகிவரும் சமத்துவமின்மை ஆகியவற்றை மிகவும்ஆழமான கவலையுடன் பதிவு செய்கிறது.
பாஜகவின் பாசாங்கு...
பாஜகவினர் தங்களை ‘தேசியவாதிகள்’ என்று அழைத்துக்கொண்டே, நாட்டின் செல்வங்களான – நிலங்கள், வனங்கள், நீர்நிலைகள், சுரங்கங்கள் மற்றும் கேந்திரமான ராணுவத்துறை உட்பட பொதுத்துறை நிறுவனங்களிலும் அந்நிய நேரடி முதலீட்டை 100 சதவீதஅளவிற்குத் திறந்துவிட்டிருப்பதன் மூலமாக, நாட்டின்நலன்களுக்கு எதிராக ஒட்டுமொத்தமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இவ்வாறு நாட்டின் செல்வங்களை அந்நியருக்குத் தாரைவார்க்க முனைந்திருப்பது மட்டுமல்லாமல், உலக நாடுகள் வியக்கும் விதத்தில் நாம் இதுகாறும் கடைப்பிடித்து வந்த சுயேச்சையான அயல்துறைக் கொள்கையையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளியாக மாறக்கூடிய விதத்தில்மாற்றியமைத்திருக்கிறது. இது இந்த அரசாங்கத்தின் மிகப்பெரிய கேலிக்கூத்து, முரண்தகை மற்றும் பாசாங்குத்தனமான நடிப்பு என்று சிஐடியு சுட்டிக்காட்டுகிறது.திரிபுராவில் பாஜக ஆட்சிக்கு வந்தபின்னர் அங்குஉள்ள இடதுசாரிக் கட்சிகள் மற்றும் சிஐடியு ஆகியவற்றின் அலுவலகங்களையும், ஊழியர்களையும் பாஜக குண்டர்கள் தாக்கியதற்கும், அங்கிருந்த லெனின்சிலையைத் தகர்த்ததற்கும் சிஐடியு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. இத்தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் சிஐடியு கோருகிறது.
திரிபுரா...மே.வங்க மக்களுக்கு ஒருமைப்பாடு
இத்தாக்குதல்களை வீரத்துடன் எதிர்த்து வரும் திரிபுரா தொழிலாளர் வர்க்கத்திற்கும், மக்களுக்கும் சிஐடியு தன் ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக்கொள்கிறது. வீர வணக்கங்களையும் உரித்தாக்கிக் கொள்கிறது. இத்தாக்குதல்களிலிருந்து திரிபுரா மக்கள் விரைவில் மீண்டெழுவார்கள் என்ற நம்பிக்கையை சிஐடியு தெரிவித்துக் கொள்கிறது.மேற்கு வங்கத்தில், குறிப்பாக பஞ்சாயத்துத் தேர்தல்கள் நடைபெறக்கூடிய சமயத்தில், திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களால் இடதுசாரிகள் மற்றும் சிஐடியுஊழியர்கள் மீது ஏவப்பட்டுவரும் தொடர் தாக்குதல்களை சிஐடியு கடுமையாகக் கண்டிக்கிறது. ஒட்டுமொத்த தொழிலாளர் வர்க்கமும் மற்றும் ஜனநாயக இயக்கமும் தெரிவித்த எதிர்ப்புகள் அனைத்தையும் நசுக்கிவிட்டு, மே தினத்தன்று பஞ்சாயத்துத் தேர்தல்களை நடத்திட திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கம் முடிவெடுத்ததற்காகவும் சிஐடியு கண்டனம் செய்கிறது. மேற்கு வங்க மாநிலத்தில் பஞ்சாயத்துத் தேர்தல்களில் போட்டியிடுவதிலிருந்து இடதுசாரிக் கட்சி ஊழியர்களையும், தலைவர்களையும் தடுப்பதற்காக அவர்களை நேரடியாகத் தாக்குதல் தொடுத்ததையும், அவர்களை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யவிடாமல் தடுத்ததையும் சிஐடியுகண்டிக்கிறது. இத்தகைய கொடூரமான தாக்குதல்களைத்துணிந்து எதிர்த்திட்ட மக்களுக்கு சிஐடியு தன் ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக் கொள்கிறது.நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக பாஜக ஆளும்மாநிலங்களில், தலித்துகள் மீதும், சிறுபான்மையினர் மீதும் தாக்குதல்கள் அதிகரித்துவருவதற்கு சிஐடியு தன்கோபத்தை வெளிப்படுத்திக் கொள்கிறது. ஆர்எஸ்எஸ்-உம் பாஜக-வும் தூக்கிப்பிடிக்கும் மிகவும் பிற்போக்குத்தனமான, மனு(அ)தர்மச் சிந்தனைகள்தான் இவ்வாறு தலித்துகளை, பழங்குடியினரை, பெண்களை, நசுக்குவதற்கும், அவர்கள் மீதான தாக்குதல்களை ஊக்கப்படுத்துவதற்கும் வழிகோலுகிறது. மன(அ)நீதியைத் தொடர்ந்து பின்பற்றிடுவோம் என்று கூறும்பாஜக, அவ்வப்போது தலித்துகள் மீது பாசம் காட்டுவதுபோல் நடிப்பது தேர்தல் ஆதாயத்திற்காகவே தவிர வேறெதற்காகவும் அல்ல என்று சிஐடியு தெரிவித்துக் கொள்கிறது.
போராட்டங்களுக்கு வரவேற்பு
இவ்வாறு பாஜக தங்களுடைய வாழ்வு மற்றும் வாழ்வாதாரங்கள் மீது தொடுத்துள்ள தாக்குதல்களை எதிர்த்திடவும், மேலும் நாட்டின் அரசமைப்புச் சட்டம்மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை எதிர்த்து முறியடித்திடவும் நாட்டின் பல முனைகளிலும் தொழிலாளர்கள், விவசாயிகள், தலித்துகள், மாணவர்கள் முதலானவர்களின் போராட்டங்கள் நாளும் வளர்ந்து வருவதற்கு சிஐடியு தன் வரவேற்பை உரித்தாக்கிக் கொள்கிறது.மே தினமான இன்று, சிஐடியு, நாட்டில், தொழிலாளர்வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்களின் மீதும் ஏவப்பட்டுள்ள சவால்களுக்கு எதிராக மும்முனைகளில் போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றிட வேண்டும் என்று – அதாவது, நவீன தாராளமயத்திற்கு எதிரானபோராட்டம், மக்களை மதரீதியாகவும் சாதி ரீதியாகவும் பிளவுபடுத்துவதற்கு எதிரான போராட்டம், எதேச்சதிகாரத்திற்கு எதிரான போராட்டம் என மும்முனைகளில் போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றிட வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறது.இத்தகு சவால்களை வலுவாக எதிர்கொள்ளக்கூடிய விதத்தில் நாட்டிலுள்ள ஒட்டுமொத்த தொழிலாளர் வர்க்கத்தையும் அணிதிரட்டிட உறுதி எடுத்துக்கொண்டிருப்பதை சிஐடியு பிரகடனம் செய்கிறது. ஒன்றுபட்ட போராட்டம் என்கிற மேடையில் உழைக்கும் மக்களின் அனைத்துப்பிரிவு மக்களும் அணிதிரண்டு, மேடையை வலுவானதாகவும், விரிவானதாகவும் மாற்ற உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை சிஐடியு மீண்டும் வலியுறுத்திக் கூறிக்கொள்கிறது.
சுரண்டும் வர்க்கத்துக்கு
சேவைசெய்யும் மதவெறி
பெரும்பான்மை மதவெறி, சிறுபான்மை மதவெறி மற்றும் அடிப்படைவாதம் ஒன்றையொன்று ஊட்டி வளர்ப்பவை என்று சிஐடியு மீண்டும் வலியுறுத்திக் கூறிக்கொள்கிறது. மதவெறி அது எந்த வர்ணத்தின் கீழ் அல்லது கொடியின்கீழ் வந்தாலும் அது மக்களைப் பிளவுபடுத்திடும், அவர்களின் ஒற்றுமைக்கு ஊறு விளைவித்திடும், நாளும் நம்மை வாட்டிவதைத்திடும் உண்மையான பிரச்சனைகளின் மீது கவனம் செலுத்தாதவாறு அது கவனத்தை திசைதிருப்பிடும், உண்மையான கயவாளிகளுக்கு எதிராக – அதாவது, நவீன தாராளமயக் கொள்கைகள் மற்றும் சுரண்டும் அமைப்புமுறையைத் தூக்கிப்பிடிப்பவர்களுக்கு எதிராக - மேற்கொள்ளப்படும் போராட்டங்களை பலவீனப்படுத்திடும் என்றும் இறுதியாக மதவெறி சுரண்டும் வர்க்கங்களுக்கே சேவை செய்திடும் என்றும் சிஐடியு வலியுறுத்திக்கூறிக்கொள்கிறது.அனைத்துவிதமான சுரண்டலையும் உக்கிரப்படுத்திவரும் நவீன தாராளமயக் கொள்கைகள் மற்றும் முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிராகப் போராடுவதற்கும்,அந்தத் திசைவழியில் முன்னேற உறுதி எடுத்துக்கொள்வதற்கும், தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் ஒன்றுபட வேண்டிய தேவையை சிஐடியு அழுத்தம் தந்து, கூறிக்கொள்கிறது.
உழைக்கும் மக்களை அணிதிரட்டிட, நவீனதாராளமயத்திற்கு எதிராக துல்லியமான மாற்றுக்கொள்கைகளை முன்வைத்து, கூட்டுத் தொழிற்சங்கஇயக்கத்தை வலுப்படுத்துவதற்கான முன்முயற்சிகளையும், சுயேச்சையான பிரச்சாரங்களையும் மேற்கொண்டிடவும் சிஐடியு உறுதி எடுத்துக் கொள்கிறது.இத்தகையதொரு மக்கள் திரள் பங்கேற்கும் போராட்டங்களின் மூலம்தான் தொழிலாளர் வர்க்கத்திற்குஆதரவாக வர்க்க சக்திகளின் சேர்மானத்தில் புரிந்துகொள்ளக்கூடிய அளவிற்கு மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்கிற நம்பிக்கையை சிஐடியு மீண்டும் வலியுறுத்திக் கூறிக் கொள்கிறது. சென்ற ஆண்டு 2017 மே தினத்தன்று, சிஐடியு இந்தியத்தொழிலாளர் வர்க்கத்திற்கு கீழ்க்கண்ட வேண்டுகோள்களை விடுத்திருந்தது:நவீன தாராளமயக் கொள்கைகளை முறியடித்திடுவதற்கான போராட்டங்களையும், தொழிலாளர் ஆதரவுமற்றும் மக்கள் ஆதரவுக் கொள்கைகளை கொண்டுவருவதற்கான போராட்டங்களையும் உக்கிரப்படுத்திட வேண்டும் என்றும் அவற்றுக்கான ஒற்றுமையை வலுப்படுத்திட வேண்டும் என்று கோரியிருந்தது.ஒற்றுமையைச் சீர்குலைத்திட மதவெறி சக்திகள், சாதி வெறி சக்திகள் மேற்கொள்ளும் சூழ்ச்சிகளை விழிப்புடனிருந்து முறியடித்திட வேண்டும் என்று கோரியிருந்தது.தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள் முதலான உழைக்கும் மக்கள்அனைத்துத்தரப்பினரின் மத்தியிலும் ஒருமைப்பாட்டையும் ஆழமான பிணைப்பினையும் கொண்டுவர வேண்டும்என்று கோரியிருந்தது.முதலாளித்துவ அமைப்பு முறை மற்றும் அதன் அரசியல் மற்றும் அவற்றை மேம்படுத்திட விரும்பும் சக்திகள் அனைத்தும்தான் தொழிலாளர் வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்களின் அனைத்துப் பிரிவினருக்கும் உண்மையான எதிரி என்பதை அடையாளம் காட்டி, சுரண்டும் அமைப்புமுறையை மாற்றியமைப்பதற்கான போராட்டத்திற்குத் தயாராவீர் என்று அறைகூவல் விடுத்தது. ‘சிஐடியு, இந்த மே தினத்தன்று, சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் ஒருமைப்பாடு மற்றும் அனைத்துவிதமான சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிரான ஒற்றுமைக்கு ஆதரவாக, தன்னுடைய பதாகையை, உயர்த்திப்பிடிக்கிறது. ‘முதலாளித்துவம் ஒழிக, ஏகாதிபத்தியம் ஒழிக,சோசலிசம் நீடூழி வாழ்க.உலகத் தொழிலாளர்களே, ஒன்றுபடுவோம்.
தமிழில் : ச.வீரமணி

புதன், 7 மார்ச், 2018

f

எது சொந்தக் கருத்து?

‘இன்று லெனின் சிலை; நாளை பெரியார் சிலை’ என்று பதிவிட்டிருக்கிறார் பாஜகவின் எச்.ராஜா. அவரது கருத்துக்கு தமிழகம் முழுவதும் பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து பாஜகவின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் இது அவரது சொந்தக் கருத்து என்றும் இது கட்சியின் அதிகாரப்பூர்வ கருத்து அல்ல என்றும் கூறி சமாளித்திருக்கிறார்.மகாத்மா காந்தியின் கொலையைக் கொண்டாடியவர்கள், கொலையாளி கோட்சேயை பூஜிப்பார்கள், இப்போதும் கூட எங்களுக்கும் அவருக்கும் தொடர்பில்லை என்று கூறுபவர்கள் தான் எச்.ராஜா, தமிழிசை ஆகியோரின் தலைமைப் பீடமான ஆர்எஸ்எஸ். இவர்களது முழக்கமான இந்து ராஷ்டிரத்துக்கு எதிரி என நினைப்பவர்களை அவர்களது அமைப்பை- கொள்கையை ஜனநாயக ரீதியாக எதிர்ப்பதை விடுத்து வன்முறை வெறியாட்டம், கொலை ஆகியவற்றின் மூலம் அழித்து விடத்துடிப்பதே அவர்களின் செயல்பாடாக இருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் பாபர் மசூதி இடிப்பு. அன்றைய தினம் கூட பாஜக சார்பில் இப்படித்தான் சொல்லப்பட்டது. பின்னர் அதன் பரிவார அமைப்புகள் தாங்கள் தான் செய்தோம் என்று பெருமை பேசின.
இதையெல்லாம் இந்திய மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.லெனினுக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு என்று கேட்டிருக்கிறார் ‘அறிவாளி’ எச்.ராஜா. இவரது வாதம் லெனின் வெளிநாட்டுக்காரர் என்பது. ஆனால் இவர்களின் ஆர்எஸ்எஸ், இந்துமகாசபையின் தலைவர்களான கோல்வால்கர், மூஞ்சே போன்றவர்கள் எல்லாம் இத்தாலியின் பாசிஸ்ட் முசோலினியை, ஜெர்மனியின் நாஜிவெறியன் ஹிட்லரை தங்கள் வழிகாட்டிகளாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்களே, அது என்னவாம்? கும்பலைத் திரட்டுவதும் அதை மனரீதியாக தயார்ப்படுத்துவதும் அதை வெறியூட்டி வன்முறையில் இறங்க வைப்பதும் தானே ஆர்எஸ்எஸ் பரிவாரத்தின் செயல்முறை. அப்படித்தானே குஜராத்தில் சிறுபான்மை மதத்தவரை மோடி-அமித் ஷா கூட்டணியின் தலைமையில் கொன்று குவித்தார்கள். அப்போதெல்லாம் பாரத் மாதா கி ஜே என்று கோஷமிடவும் செய்தார்கள். அதைத்தானே திரிபுராவில் இப்போதும் செய்திருக்கிறார்கள்.அத்தகைய வன்முறை வெறியில், மதவெறி மமதையில் தான் எச்.ராஜா தன் உள்ளக் கிடக்கையை அண்மைக் காலமாகவே வெளிப்படுத்தி வருகிறார். பெரியார் சிலையை செருப்பாலடிப்பேன் என்பதும் பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்பதும் அதுதானே! இத்தகைய கலவரத்தைத் தூண்டும் வன்முறைப் பேச்சுக்காகவே தமிழக காவல்துறை எச்.ராஜா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் தமிழக முதல்வர் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை தலைவர்கள் மாநாட்டில் பேசிய பேச்சுக்கு பொருள் இருக்கும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றன் பிறந்த நாட்டில் வாழும் எச்.ராஜா போன்றவர்களின் பிரிவினை, வன்முறைப் பேச்சுக்கு கட்டாயம் தமிழக காவல்துறை நடவடிக்கை எடுத்தாக வேண்டும்

as

தூத்துக்குடியில் காவல்துறையின் முன் அனுமதி பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டையொட்டி கட்டுப்பாடோடு நடைபெற்ற செம்படை பேரணியை சீர்குலைக்க காவல்துறையினர் அத்துமீறி நடந்துள்ளனர். அதிகாரி செல்வநாகரத்தினம் காட்டுத்தனமாக நடந்துள்ளார். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சென்னை டிஜிபி அலுவலகத்தின் முன்னால்போராட்டம் நடத்தும் என்று கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.காவல் துறையினரின் அராஜகம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் அதிகமாக நடந்து கொண்டே இருக்கிறது.

அச்சத்தை உருவாக்கிய ஆங்கிலேய ஆட்சி

காவல் துறையில் பணிபுரியும் போலீஸ்காரர்களுக்கு அவர்களின் துறை வரலாறே தெரியாது. ஆங்கிலேயர்கள் அடிமை நாடாக இந்தியாவை ஆண்டபோது நாட்டு மக்களைஅடிமைகளைப் போல அடக்க - ஒடுக்க அங்கீகரிக்கப்பட்ட அடியாட்களாக உள் ஆட்களையே தேர்வு செய்து ஊதியமும் கொடுத்து காவல் துறையை உருவாக்கியது. அப்படிப்பட்ட அடியாட்களுக்கு கல்வி கட்டாயமில்லை. ஆட்கள் ஆஜானுபாவாக உடல் வலிமையோடு இருந்தால் போதும்.தடியடி பிரயோகம் செய்வது எப்படி? துப்பாக்கி சுடுவது எப்படி? என்று பயிற்சி கொடுத்து வைத்திருந்தார்கள். அவர்களுக்கு மாத சம்பளம் ரூ.9. வருட ஊதிய உயர்வு எட்டணா. ஆனால் உத்தரவிடும் மேல் அதிகாரிகள் எல்லாம் ஆங்கிலேயர்களாகவே இருந்தார்கள். மக்கள் இயக்கங்கள், போராட்டங்கள் என்றால் காட்டுமிராண்டித்தனமாக அடித்துஒடுக்குவார்கள். துப்பாக்கி பிரயோகமும் செய்வார்கள். அப்போதெல்லாம் மனித உரிமைக்கழகமாவது, மண்ணாவது.சட்டங்களும் கொடுமையானவை. தண்டனைகளும் கொடுமையானவை. சித்ரவதைகளும் கொடுமையானவை. தாய்மார்கள் குழந்தைகளுக்கு சோறு ஊட்டுகிறபோது நிலாவைக் காட்டி சோறு ஊட்டுவதுடன் மட்டுமல்ல, சோறு தின்ன அடம்பிடிக்கிற குழந்தையிடம் அதோபோலீஸ்காரன் வருகிறான். பிடித்துக் கொடுத்துவிடுவேன் என்று பயம் காட்டி சோறு ஊட்டுகிற அளவுக்கு போலீஸ் பற்றிய பயம் மக்களிடம் உருவாக்கப்பட்டிருந்தது. காரணம், ஆங்கிலேயர்கள் நடத்திய அடிமை ஆட்சி.

ராஜாஜி காலத்தில் முதல் எதிர்ப்பு

நாடு சுதந்திரம் பெற்று குடியரசு நாடாக ஆன பிறகும் கூட, ஆங்கிலேயர்கள் ஆரம்பித்து நடத்திய காவல்துறை ஆட்சி பீடம் ஏறிய காங்கிரசுக்கும், மக்களை அடக்க, ஒடுக்க மிக வசதியாக இருந்த காரணத்தினால் அதனுடையகட்டுக்கோப்பை குலையாமல், மாற்றாமல் அப்படியே காத்தார்கள். அவ்வப்போது சில ஒப்புக்கான மாற்றங்கள்செய்தார்கள். அவ்வளவே. அப்போதும் போலீஸ்காரர்கள் அடியாட்கள் தான். அவர்களுக்கு எந்த உரிமைகளும் கிடையாது. இயந்திரம் தான். உதாரணமாக, தமிழ்நாட்டில் ராஜாஜி முதலமைச்சராக இருந்த போது முதன்முதலாக எத்திராஜ் என்கிற தலைமை போலீஸ்காரர் சங்கம் அமைத்து கோரிக்கைகளை நிர்வாகத்திடம் கொடுத்தும் பலன் இல்லா காரணத்தினால் தங்கள் அதிருப்தியை தெரிவிக்க முதல் நாள் வாங்கும் சம்பளத்தை மறுத்து இரண்டாம் நாள் வாங்குவதாக முடிவெடுத்தார்கள். அன்றைய (சக்கரவர்த்தி) ராஜகோபாலாச்சாரியாருக்கு இது போலீஸ்காரர்களின் அத்துமீறலாகப்பட்டது. ஒழுங்கீனமாகப்பட்டது. எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத முறைகேடானது என கர்ஜித்தார். உடனே, அன்றைய மாநில காவல்துறை அதிகாரியை கூப்பிட்டார். அப்போது தெய்வசகாயம் என்கிற ராணுவத்தில் இருந்து விடுபட்ட நபர் தான் போலீஸ் அதிகாரி. அவரோடு கூடிபேசி ராஜாஜி ஒழுங்கீனத்தை அடக்க ரகசிய திட்டமிட்டுராணுவத்தை கொண்டு வந்து போலீஸ் நிலையங்களில் புகுந்து போலீஸ்காரர்களை ஓட ஓட அடித்து முரட்டுத்தனமாக ஒடுக்கினார்கள். எதிர்பாராத இந்த தாக்குதல்களினால் போலீஸ்காரர்கள் சுவர் ஏறி குதித்து ஓடினார்கள்.


ராணுவம் போராடினால் யாரைக் கொண்டு அடிப்பீர்கள்?
அன்று ஒருவர் ஆட்சேபித்து ராஜாஜியை ஒரு கேள்விகேட்டார். போலீஸ்காரர்கள் ஜனநாயக போராட்டம் நடத்தினால் ராணுவத்தைக் கொண்டு அடித்தீர்கள். ராணுவம் போராடினால் யாரைக் கொண்டு வந்து அடிப்பீர்கள் என்றுகேட்டார். அவர் வேறு யாருமல்ல... தோழர் பி.ராமமூர்த்திதான். ராஜாஜி போராட்டத்தை ஒடுக்கியது மட்டுமல்ல, ஹெட் காண்ஸ்டபிள் எத்திராஜ் உள்பட 25 பேரை டிஸ்மிஸ்செய்துவிட்டார். அந்தோ பரிதாபம். நீண்ட நாட்கள் அந்தசங்கம் எழுந்திருக்கவேயில்லை.அடுத்து கலைஞர் ஆட்சிக்காலத்தில் பிரிட்டோ என்கிறபோலீஸ்காரர் தலைமையில் சங்கம் உருவானது. சிலகோரிக்கைகளை வைத்து இயங்கினார்கள். ஆனால், பிரிட்டோவும் வேலைநீக்கம் செய்யப்பட்டார். பிறகு நீண்ட நாள் பாடாய் பட்டு அவர் வேலையில் அமர்த்தப்பட்டார். ஆனால், கடைசி வரை சங்க அங்கீகாரம் கிடைக்கவில்லை. எம்ஜிஆர் காலத்திலும் சங்கம் அமைக்கப்பட்டு அங்கீகாரம் கேட்கப்பட்டது. ஆனால் அங்கீகாரம் மறுக்கப்பட்டது. அவர்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன் உண்ணாவிரதம் இருந்தனர். அப்போது எந்த கட்சியும் அதை ஏற்றுக்கொள்ளாத போது, தோழர் ஆர்.உமாநாத் தான் சென்று மாலை அணிவித்து போராட்டத்தை வாழ்த்திப் பேசினார். ஜெயலலிதா காலத்தில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. மேற்குவங்கம், திரிபுரா, கேரள இடதுசாரி அரசுகள் தான் போலீசாருக்கு சங்கம் வைக்கும் உரிமை வழங்கின.

தசரத் தேவும் ஜோதிபாசும்

கீழ்மட்ட போலீஸ்காரர்களின் சிரமங்களை தொழிலாளிவர்க்க கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி தான் நன்கு அறிந்துள்ளது. அவர்களும் உழைப்பாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்தான். ஆனால், அத்துமீறி மக்களுக்கு எதிராக நடந்தால்அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆனால், அவர்களின் உரிமைகளுக்காக அவர்கள் சங்கம் வைத்துக்கொள்ள வேண்டுமென்று கோருகிற கட்சி தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. திரிபுராவில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 500 போலீஸ்காரர்கள் கோரிக்கைகளுக்காக போராடிய காரணத்தினால் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருந்தார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி பீடம் ஏறிய போது அன்றைய முதலமைச்சர் தசரத் தேவ் பதவி ஏற்ற போது முதல் கையெழுத்து போட்டு அந்த போலீஸ்காரர்களுக்கு மீண்டும் வேலைநியமனம் செய்தார். அதுமட்டுமல்ல, 5 ஆண்டுகளுக்கான ஊதிய நிலுவையையும் தந்தார்.அதேபோல், ஜோதிபாசு முதலமைச்சராக பதவி ஏற்ற போது காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அரசு ஊழியர்கள் போராடியதற்காக முக்கியமான தலைவர்கள் 30 பேரைடிஸ்மிஸ் செய்யப்பட்டார்கள். அவர்களை மீண்டும் வேலையில் அமர்த்தி ஊதியத்தொகையையும் வழங்கினார். அந்தஊதிய தொகையை அந்த தலைவர்கள் அப்படியே சங்கத்திற்கு கொடுத்துவிட்டார்கள். காரணம் - டிஸ்மிஸ்செய்யப்பட்டிருந்த காலத்தில் சங்கம் தான் அவர்களுக்கு ஊதியம் தந்தது. தமிழகத்தில் உள்ள போலீஸ்காரர்கள் சிந்தித்து பார்க்கவேண்டும். உங்கள் அதிகாரிகள் உங்களை கடுமையாக வேலை வாங்குகிறார்கள். ஒரு அதிகாரி ஒரு போலீஸ்காரரை நாயே, கழுதையே, மடையா, வயித்துக்கு என்ன சாப்பிடுகிறாய், எருமையா நீ என்று கடுமையாக ஏசியதை நானே நேரில் கேட்டிருக்கிறேன். பாவம் அந்தபோலீஸ்காரர் வாய் திறக்காமல் மவுனியாக அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார். போலீஸ்காரர்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் தான். இதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

உங்களுக்காகவும் தான்...

நீட் தேர்வை எதிர்த்து கம்யூனிஸ்டுகள் போராடினால் அது போலீஸ்காரர்கள் வீட்டு பிள்ளைகளுக்காகவும் சேர்த்து தான் போராடுகிறார்கள். பெட்ரோல் விலை உயர்ந்தாலோ அதை எதிர்த்து போராடுகிற போது போலீஸ்காரர்களும்தான் பயன் பெறுவார்கள். ஜனநாயகவாலிபர் சங்கம் வேலை கேட்டு போராடுகிற போது, எல்லோருக்கும் வேலை, எல்லோருக்கும் கல்வி என்று மாணவர் சங்கம் போராடுகிற போது போலீஸ்காரர்களின் பிள்ளைகளுக்காகவும் சேர்த்து தான் போராடுகிறார்கள். ஆங்கிலேயர்கள் ஆண்ட போது மக்களிடமிருந்தே வரியாக பணத்தைப் பெற்று அந்த தொகையிலேயே போலீஸ்காரர்களுக்கு சம்பளம் கொடுத்து உள்ளூர் மக்களை அந்த போலீசைக் கொண்டு தாக்கவும் செய்தார்களே. அப்படித்தான் இப்போதும் உங்களை வைத்தே, நியாயம் கேட்டு போராடுகிற மக்களையும் ஆட்சியாளர்கள் தாக்குகிறார்கள். நீங்கள் உங்கள் உரிமைகளுக்காக குரல் கொடுத்தால், போராடினால் உங்களையும் தாக்குகிறார்கள். அந்த நேரத்தில் உங்களோடு தோள்கொடுத்து நிற்பவர்கள் கம்யூனிஸ்டுகள் தான் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.மாநில அரசுகளும், மத்திய அரசும் போலீஸ்துறையின் குணாம்சங்களை மாற்ற நடவடிக்கை எடுப்பதாக சொல்லிக்கொண்டு எத்தனையோ கமிஷன்களை அமைத்தார்கள். ஆனால், அவையெல்லாம் வெறும் கண்துடைப்புக்காக அமைக்கப்பட்டதுதான். ஏனெனில் எந்த மாற்றமும் அதனால் ஏற்படவில்லை. காரணம். அதன்வர்க்க குணம் மாறாது. போலீஸ் என்பது ஆளும்வர்க்கத்தின் ஏவல் அமைப்பு. தனிப்பட்ட சிலர் நல்லவர்களாக இருக்கலாம். இந்த உண்மைகளை கீழ்மட்ட போலீஸ்காரர்கள் தெரிந்து கொள்வது நல்லது.


ஆங்கிலேயர்கள் ஆண்ட போது மக்களிடமிருந்தே வரியாக பணத்தைப் பெற்று அந்த தொகையிலேயே போலீஸ்காரர்களுக்கு சம்பளம் கொடுத்து உள்ளூர் மக்களை அந்த போலீசைக் கொண்டு தாக்கவும் செய்தார்களே. அப்படித்தான் இப்போதும் உங்களை வைத்தே, நியாயம் கேட்டு போராடுகிற மக்களையும் ஆட்சியாளர்கள் தாக்குகிறார்கள்.

திங்கள், 19 பிப்ரவரி, 2018

இரக்கமற்ற தமிழக அரசு TNEB தொழிலாளர்களை வேலைநிறுத்தம் நோக்கித் தள்ளியது!

தமிழ்நாடு மின் வாரியத்தைச் சேர்ந்த ஆயிரக் கணக்கானத் தொழிலாளர்கள் 2018 பிப்ரவரி 16 முதல் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். 2.57 என்ற காரணியின் அடிப்படையில் சம்பள உயர்வு வேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஏற்காததாலும், சம்பள ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் அரசுக்கு விருப்பம் இல்லாத காரணத்தாலும், CITU வையும், பிற சிறிய சங்கங்களையும் சேர்ந்த தொழிலாளர்கள் அரசுக்குத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். பிப்ரவரி 8 அன்று சென்னையில் உள்ள மின்சார வாரியத் தலைமையகத்தின் முன்பு நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் தலைவர்கள் பலரும் பேசினர். அரசு மற்றும் வாரிய அதிகாரிகளின் செயலின்மையை விளக்கினர். வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமானதாக்க உறுதியேற்றனர். தொழிலாளர் துறை அலுவலகத்தில் நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தை எந்த விளைவையும் அளிக்கவில்லை.

புதிய சம்பள ஒப்பந்தம் வேண்டும் என்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மின் வாரியத் தொழிலாளர்கள் கோரிவருகின்றனர். இதற்கு முந்தைய ஒப்பந்தம் டிசம்பர் 2015ல் முடிவுக்கு வந்தது. அது முதற்கொண்டு ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள வேண்டும் என்று மின்சார வாரியத்தையும் தமிழக அரசையும் தொழிற்சங்கங்கள் நெருக்கிக்கொண்டு வருகின்றன. சம்பள அதிகரிப்பின் அளவு என்ன என்பது, போக்குவரத்துத் துறை போலவே, இங்கும் பிரச்சனையாக இருக்கிறது. 2.57 என்ற காரணியின் அடிப்படையில் ஊதிய உயர்வு அமைய வேண்டும் என்பதில் தொழிற்சங்கங்கள் உறுதியாக நிற்கின்றன. கடந்த ஆண்டு நடைபெற்ற பேச்சுவார்த்தையின் இதனைக் கோட்பாடு அடிப்படையில் அரசு ஒப்புக்கொண்டிருந்தது. இப்போது, அரசு சொன்ன சொல்லிலிருந்து பின்வாங்குவதாகத் தோன்றுகிறது. சில தொழிற்சங்கங்கள் தங்கள் நிலையில் உறுதியாக இருந்தன. மற்றவர்கள் தற்காலிக நிவாரணம் ஒன்றை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

Video Player
0:00
00:18
தமிழ்நாடு மின்சார வாரியம் அரசுக்குச் சொந்தமான கம்பெனியாகும். மின்சார உற்பத்திக்கும், அதனை மாநிலம் முழுமைக்கும் வினியோகம் செய்வதற்கும் அது பொறுப்பானதாகும். இவற்றைச் செய்வதற்காக இரண்டு துணை கம்பெனிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் வினியோக நிறுவனம் ( TANGEDCO), மற்றும் Tamil Nadu Transmission Company என்று அவை அழைக்கப்படுகின்றன. பொறியாளர்கள், கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள் என்று 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த இரண்டு கம்பெனிகளில் பணிபுரிகின்றனர். தொழிலாளர்கள் பெறும் சம்பளம் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை வருவதாகவும் மிக அதிகபட்சமான சம்பளம் 35 ஆயிரம் என்றும் TANGEDCOவின் 2014 ஆவணம் சொல்கிறது. மேலும், ஆயிரக் கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்களும் பணியாற்றுகின்றனர். அவர்கள் மிகக் குறைவான கூலிக்கு பல ஆண்டுகள் தொடர்ச்சியாக உழைத்து வருகின்றனர்.
பிப்ரவரி 8 அன்று சென்னையின் அண்ணா சாலையில் உள்ள TNEB தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அதில் கலந்துகொண்டனர். இதே போன்ற கூட்டங்கள் பல்வேறு மாவட்டங்களிலும் நடைபெற்றன. கூடுதல் பணிச் சுமை மிக முக்கியமானப் பிரச்சனையாக இருப்பது பற்றியும் மற்ற பிற பிரச்சனைகள் பற்றியும் தலைவர்கள் பேசினர். வேலையின் தன்மை காரணமாக, உயிருக்கு ஆபத்தான நிலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான கூலிப் பேச்சுவார்த்தையை முடிவுக்குக் கொண்டு வராத அரசை அவர்கள் கடுமையாகச் சாடினர். அதுமட்டுமல்லாமல் அனைத்து மட்டங்களில் உள்ள 40 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதாகச் சொன்ன அரசு அதனைச் செய்யத் தவறியதையும் சுட்டிக் காட்டி விமர்சித்தனர். DMDK, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் சிலம் அதிமுகவின் ஊழல் மற்றும் இரக்கமற்றத் தன்மை பற்றி பேசுவதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டனர்.
31.03. 13 நிலவரப்படி ஊழியர்களின் எண்ணிக்கை

 ஊழியர்வகையினம்
 அனுமதிக்கப்பட்டஊழியர்எண்ணிக்கை
 காலியிடம்
 நடப்பில்இருக்கும்ஊழியர்எண்ணிக்கை
 பிரிவு 1
தொழில்நுட்பம்
 931
 48
883 
 நிர்வாகம்
 49
 6
 43
கணக்கு/தணிக்கை
105
10
95
பிரிவு 2
தொழில்நுட்பம்
8889
391
8498
நிர்வாகம்
477
39
438
கணக்கு/தணிக்கை
746
24
722
பிரிவு 3
ப்ராவின்சியல்(ரீடிங் எடுப்பதுஉள்ளிட்டஎழுத்துப் பணி)
28472
10832
17640
RWE (லைன்மேன்உள்ளிட்டபணியாளர்கள்)
51980
25434
26546
பிரிவு 4
ப்ராவின்சியல்(ரீடிங் எடுப்பதுஉள்ளிட்டஎழுத்துப் பணி)
1601
561
1040
RWE (லைன்மேன்உள்ளிட்டபணியாளர்கள்)
44280
12095
32185
மொத்தம்
137530
49440
88090

தலைவர்கள் பேசியதில் பெரும்பகுதி கூலிப் பிரச்சனை தொடர்பானதாகவே இருந்தது. ஆனால், கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் சிலரிடம் தொழிலாளர் கூடம் பேசியபோது அவர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பிரச்சனை பற்றி நிறைய பேசினார்கள். இரண்டு இளம் தொழிலாளர்களைச் சந்தித்தோம். அவர்கள் இருவரும் வட சென்னை அனல் மின்நிலையத்தின் பராமரிப்புத் துறையில் பணியாற்றுகிறார்கள். கடந்த 7 ஆண்டுகளாக ஒப்பந்தத் தொழிலாளர்களாக வேலை செய்கிறார்கள். அவர்கள் வாங்கும் சம்பளம் மாதம் ஒன்றுக்கு 7 500 முதல் 10000 ரூபாய் வரை வருகிறது. இது நிரந்தரத் தொழிலாளர்கள் வாங்கும் சம்பளத்தின் சிறு பகுதிதான். அவர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய விடுப்பு கிடையாது. ஒரு நாள் விடுமுறை எடுத்தால் கூட அதற்கான சம்பளம் போய்விடும். “மாநிலத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 2000 மெகாவாட் நாங்கள் (ஒப்பந்தத் தொழிலாளர்கள்) உற்பத்தி செய்வதுதான். ஆனால், எங்களுக்கு எந்த அடையாளமும் இல்லை. எந்தப் பாதுகாப்பும் இல்லை“, ஒரு தொழிலாளர் சொன்னார். நிரந்தரத் தொழிலாளர்களுக்கு மட்டும்தான் சீருடையும் பாதுகாப்புச் சாதனங்களும் தரப்படுகின்றன. இதனால், வேலை செய்யும் இடம் மிக ஆபத்தான இடமாக மாறிவிட்டிருக்கிறது. ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் அடையாள அட்டைகளில் வேலை செய்யும் இடத்தின் பெயர் இருக்காது. ஒப்பந்தக்காரர் பெயர் மட்டுமே இருக்கும். ஒருநாள் நிரந்தரமாவோம் என்ற நம்பிக்கையில், குறைவான கூலிக்கு ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை செய்து வருகிறார்கள்.
நாங்கள் பேசிய தொழிலாளடரகளில் பலர், நிரந்தரத் தொழிலாளர்கள் ஆவதற்கு முன்பு பல ஆண்டுகளாக, ஒப்பந்தத் தொழிலாளர்களாக வேலை செய்தவர்கள்தான். பின்னர், அவர்களுக்கு நேரடி வேலை வழங்கப்பட்டுள்ளது. ஒரு தொழிலாளர் 15 ஆண்டுகளுக்கு மீட்டர் ரீடிங் எடுப்பவராக ஒப்பந்தப் பணியில் இருந்திருக்கிறார். பின்னர், எட்டு ஆண்டுகளுக்கு முன்புதான் நிரந்தரம் செய்யப்பட்டிருக்கிறார். தற்போது அவர், மாதம் ரூபாய் 20 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார். சம்பள உயர்வு நடந்தால் மேலும் ஒரு 5 ஆயிரம் ரூபாய் கூடுதல் கிடைக்கும் என்று அவர் கணக்குப் போட்டு வைத்திருக்கிறார். காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த மற்றொரு தொழிலாளர் ஒருவருக்கும் இதே மாதிரியான வேலை வரலாறுதான் நடந்திருக்கிறது.
வேலைநிறுத்தம் வெற்றிகரமானதாக இருக்கும் என்று தொழிற்சங்கங்கள் நம்புகின்றன. இருந்தபோதும், வேறுபட்ட நலன் உள்ள பல்வேறு யூனியன்கள் இருப்பது மிகப் பெரும் பலவீனமாக இருக்கிறது. வேலைநிறுத்தத்தில் பங்கெடுக்கும் CITUவில் இரண்டு அமைப்புகள் மூலம் பொறியாளர்களும் தொழிலாளர்களும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்த யூனியனில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பலர் இருக்கின்றனர். வலதுசாரி சங்கமான பாரதீய மஸ்தூர் சங்கத்தில் கணிசமான உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அந்த சங்கமும் வேலைநிறுத்தத்தை ஆதரிக்கிறது. வேலைநிறுத்தத்தை PMK, DMDK, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் யூனியன்களும் அவற்றுடன் NLO, TNPEO, MAPPS, APPS சங்கங்களும் ஆதரிக்கின்றன. அஇஅதிமுகவின் அண்ணா தொழிற்சங்கப் பேரவையும், திமுகவின் தொழிலாளர் முன்னேற்றச் சங்கமும் இந்தப் பட்டியலில் இல்லை என்பது கவனிக்கத் தக்கது.
தொழிலாளர் கூடத்திடம் CITUவின் S.S சுப்பிரமணியம் பேசினார். பேச்சுவார்த்தை என்ற பெயரில் ‘துரோகச் சங்கங்களும்‘ அரசும் சேர்ந்து நாடகம் நடத்துவதாக அவர் குறிப்பிட்டார். கடந்த ஆண்டின் இரண்டாவது பாதியின்போது நடந்த பல்வேறு பேச்சுவார்த்தைகளில் சம்பள உயர்வு குறித்தும் உற்பத்தி பற்றியும் பல்வேறு கருத்துகளைத் தொழிற்சங்கங்கள் அளித்திருப்பதாக அவர் சொன்னார். ஆனால், ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள வேண்டும் என்ற அரசுக்கு இல்லை. இதன் காரணமாக ஜனவரி 23 அன்று யூனியன்கள் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்தன. வேலைநிறுத்தம் துவங்குவதற்கு ஒரு நாள் முன்பு சமரசப் பேச்சுவார்த்தை நடந்தது. அந்தப் பேச்சுவார்த்தையில் பிப்ரவரி 12 அன்று ஒப்பந்தம் ஒன்று எட்டப்படும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.
மறுநாளே அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. ஆனால், யூனியன்களின் கோரிக்கைக்கு அவர்கள் இணங்குவார்கள் என்பதற்கான அறிகுறி எதனையும் காணவில்லை 2.57 என்ற அளவுக்கு ஊதிய உயர்வு சாத்தியமில்லை என்றும், 2.40 என்ற அளவில் ஊதிய உயர்வை யூனியன்கள் ஒப்புக்கொள்ள வேண்டும், மேலும், ‘அலுவலர் அல்லது ஊழியர்‘ என்ற வேறுபாடு இன்றி ஊதிய உயர்வு 10 ஆண்டுகளுக்கு நடப்பில் இருக்கும் என்றும் அரசின் நிதித்துறைச் செயலாளர் மின்சாரத்துறை அமைச்சருக்கு 24 ஜனவரி அன்று கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். பழைய பாக்கிகள் பற்றிய கேள்விகளுக்கும் எந்தப் பதிலும் இல்லை.
இதற்கிடையில், மற்ற யூனியன்கள் முன்வந்து தற்காலிக நிவாரணமாக ரூபாய் 1250ஐ ஏற்றுக்கொண்டன. 2017 அக்டோபர் முதல் பலன் பெறும் வகையில் அந்தத் தொகை தொழிலாளர்களின் வங்கிக் கணக்குகளில் சேர்க்கப்பட்டது. அது தொழிலாளர்களுக்கு வரவேண்டியத் தொகையின் ஒரு பகுதிதான் என்பதால், அதனைத் திருப்பி அளிக்கவில்லை என்றும், இருந்தபோதும் கோரிக்கைகள் இன்னமும் தீர்க்கப்படாதிருக்கின்றன என்றும் தோழர் S.S குறிப்பிட்டார். தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்க அரசு முயற்சிப்பதாக அவர் சொன்னார். “நேற்று மின்சாரத் துறை அமைச்சரும், வாரிய அலுவலர்களும் எங்களைச் சந்திக்க அழைத்தனர். எங்களுக்கு நீங்கள் ஒரு பதிலை அளித்தாக வேண்டும் என்று அவர்களை மூன்று மணி நேரத்துக்கு நாங்கள் பிடித்து வைத்துக்கொண்டோம்“, என்றும் SS சொன்னார். பிப்ரவரி 12 அன்று தொழிலாளர் துறையில் நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தையின் போது எந்தப் பதிலையும் தராது நிர்வாகத் தரப்பினர் எழுந்து சென்று விட்டனர். நர்சுகள், போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டத்தின்போது நிகழ்ந்தது போல நீதிமன்றத்தின் தலையீடு இருந்தால் என்ன செய்வீர்கள் என்று தோழர் SS அவர்களிடம் கேட்டபோது, “அது நடக்கும்போது அதனை நாங்கள் எதிர்கொள்வோம். அப்படி நடக்கும் என்றால், எங்களின் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலிக்க வேண்டும் என்று நீதிபதிகள் ஏன் சொல்லக் கூடாது?“ என்று பதில் அளித்தார். வேலைநிறுத்தத்திற்கான தயாரிப்பு முழு வீச்சில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பிப்ரவரி 15 அன்று மற்றொரு சமரசப் பேச்சுவார்த்தை இருக்கிறது என்று யூனியன் தலைவர்கள் சொல்கிறார்கள்.

may 1

சோசலிசம் நீடூழி வாழ்க! இந்தியத் தொழிற்சங்க மையம் (சிஐடியு) மே தின அறிக்கை சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் சர்வதேச ஒருமைப்பாட்டு தினமா...