செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

மின் வாரிய ஊழியர்கள் ஊதிய உயர்வு விவகாரம்: இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை

சென்னை,பிப்.11-
தமிழக மின்சார வாரிய ஊழியர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிய உதிய உயர்வு ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும். அமைச்சரின் கூற்றுப்படி 26 மாதங்களாக பலசுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் கோரிக்கைகளை நிறைவுபடுத்தி ஒப்பந்தம் காணுவதற்குண்டான நடவடிக்கையை மின்சார வாரியமும், தமிழக அரசும் எடுக்கவில்லை.தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்புஉள்ளிட்ட 10 சங்கங்கள் கடந்த 23ஆம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தார்கள். இதையடுத்து ஜனவரி 22ஆம் தேதி தொழிற்சங்க பிரதிநிதிகள், மின்வாரிய அதிகாரிகள், தொழிலாளர் நலத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பிப்ரவரி 12ஆம் தேதிக்குள் ஊதிய உயர்வுஒப்பந்தம் போட நடவடிக்கை எடுக்கப்படும் என சமரச அதிகாரிமுன் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து 23ஆம் தேதி நடைபெற இருந்த வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.இதற்கிடையில் தமிழக மின்சார வாரியத்தில் பணியாற்றும் நிரந்தர ஊழியர்களுக்கு 2017 அக்டோபர் முதல் மாதம் 2,500 ரூபாயும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு 1,250 ரூபாயும் இடைக்கால நிவாரணம் என்றஅறிவிப்பை மின்சார துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இடைக்கால நிவாரணத்தை சிஐடியு, பிஎம்எஸ், என்.எல்.ஓ. உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் ஏற்கவில்லை. இந்த சங்கங்கள் வரும் 16ஆம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தன.இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத் துறை ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் திங்கட்கிழமை (பிப். 12) மதியம் 2 மணியளவில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் சிஐடியு உள்ளிட்ட 10 தொழிற்சங்க நிர்வாகிகளும், மின்சாரவாரிய அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

may 1

சோசலிசம் நீடூழி வாழ்க! இந்தியத் தொழிற்சங்க மையம் (சிஐடியு) மே தின அறிக்கை சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் சர்வதேச ஒருமைப்பாட்டு தினமா...