ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

எல்லாவற்றையும் கார்ப் பரேட் நிறுவனங்களின் கையில் ஒப்படைக்க மிகவும் வேகமாக செயல்படுகிறார் பிரதமர் மோடி. இதனைச் செய்ய பொய்யைமட்டுமே நம்பி களத்தில் இறங்கியுள்ளார். இவர் செய்வதை புரிந்து கேள்வி கேட்டால் இவருடைய அடியாட்களால் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பில்லாத நிலைஇந்தியாவில் நிலவுகிறது. இவற்றை வெளிக்கொணர வேண்டியஊடகங்கள் பயந்து ஒதுங்கிகொள்கின்றன. இல்லையேல் பணத்தை வாங்கிக் கொண்டு பதுங்கிக் கொள்கின்றன. இந்தியாவில் சுமார் பத்துக் கோடி மக்கள் ஈடுபடுகின்ற துறையாக மோட்டார் தொழில் இருக்கிறது.
அரசு பேருந்துகளில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் தொழில்நுட்ப தொழிலாளர்கள் என நிரந்தரமான சட்டம் மற்றும்சமூகப் பாதுகாப்புடன் இருக்கும்தொழிலாளர்கள் முதல் எவ்வித சட்ட, சமூகப் பாதுகாப்பு இல்லாதமுறைசாரா தொழிலாளர்களாக உள்ள சகலரையும் நடுத்தெருவுக்கு கொண்டுவரும் நோக்கத்தோடு சாலைப்போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.இந்தச்சட்டத்தில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள், பழுது பார்ப்பவர்கள் மட்டுமல்ல. உதிரிப்பாகங்கள் உற்பத்தி செய்பவர்கள், விற்பனை செய்பவர்கள், ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி நடத்துபவர்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், குறைந்த எண்ணிக்கையில் ஆட்டோ, லாரி, வேன், டாக்சி, பஸ், சரக்கு வாகனங்கள் வைத்திருக்கும் உரிமையாளர்கள் எனசகலரையும் பாதிக்கும் விதத்தில்இச்சட்டம் வரையறுக்கப்பட்டிருக்கிறது. இதன் விபரங்களை முதன்முதலில் வெளிக்கொண்டு வந்தது அகில இந்திய சாலைப் போக்குவரத்து சம்மேளனமாகும். 2014 ஆம் ஆண்டு முதல் நடத்தியபிரச்சாரம், எதிர்ப்பு இயக்கங்கள்என தொடர்ந்து சகலரையும் இணைத்து நடத்திய இயக்கங்களில் பலகோடிப்போர் பங்கேற்று தங்களின்எதிர்ப்பை பதிவு செய்தனர். குறிப்பாக 2015 ஏப்ரல் 30அன்று நடைபெற்ற வேலைநிறுத்தத்தில் 5 கோடிமோட்டார் தொழிலாளர்கள் பங் கேற்று சரித்திரம் படைத்தனர்.திருத்தம் மூலமாக திணிப்புஇதன்பின் அனைத்து தொழிற் சங்கங்களின் கோரிக்கையாக மாறிஒவ்வொரு வேலை நிறுத்தத்திலும்இக்கோஷம் முக்கிய கோரிக்கையாக எழுப்பி இச்சட்டம் கைவிடப்படவேண்டும் என வலியுறுத்தப் பட்டது.இடதுசாரிக்கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் இச்சட்ட முன்வடிவை எதிர்த்தன. இவ்வளவு எதிர்ப் பிற்கு பிறகும் மோட்டார் தொழிலைகார்ப்பரேட்டுகள் கையில் ஒப்படைக்கும் முடிவில் பின்வாங்க மறுக்கிறது மோடி அரசாங்கம்.
புதிய சட்டமாக கொண்டு வரமுடியாது என்பதை உணர்ந்த அரசாங்கம் மோட்டார் வாகனச்சட்டம் 1988 இல் திருத்தம்மூலமாக அனைத்து அம்சங்களையும் நிறைவேற்றத் துடிக்கிறது.ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டு விவாதம் நடத்த நேரம் ஒதுக்காமல் அவசர அவசரமாக குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பின் காரணமாக நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.விபத்தை குறைக்க என்று கூறி...இச்சட்டம் விபத்துகளைக் குறைப்பதற்காக என மக்களை ஏமாற்றுகிறது. இந்த அரசாங்கம் எதிலும் உண்மை பேசுவதில்லை என்பதற்கு மோட்டார் வாகனச் சட்டத்திருத்தம் மிக முக்கியமான ஆதாரமாகும். விபத்துகளை மட்டும் குறைப்பதாகத்தான் இச்சட்டம் இருந்தால் ஏன் இவ்வளவு எதிர்ப்புவருகிறது. ஒட்டுமொத்த மோட்டார்தொழிலையும் கார்ப்பரேட்டுகள் கையில் ஒப்படைக்க விபத்தை காரணம் காட்டுகிறார்கள். எந்த மோட் டார் தொழிலாளியும் தன் மனசார ஒரு விபத்து நடத்தவேண்டும் எனவிரும்பமாட்டார். விபத்து எதிர்பாராமல் நடப்பதுதான். இச்சட்டத்தில்மோட்டார் தொழிலாளர்கள் அனைவரும் சமூக விரோதிகள், திட்டமிட்டே விபத்தை ஏற்படுத்துகிறார் கள் என்பதைப்போல் சித்தரிக்கப் பட்டுள்ளது. இச்சட்டம் அமலுக்கு வருமுன்னே இச்சட்டத்தில் சொல்லப்பட்ட விபத்துக்கு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்வது, ஓட்டுநர் உரிமம் பறிப்பு, வாகனங்கள் முடக்கம், கடுமையான அபராதங்கள் விதிக்கப்படுகிற நடைமுறைகள் துவங்கியுள்ளன.இதுபோன்ற நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும், மோட்டார் வாகனச் சட்டம் முழுமையாக கைவிடப்பட வேண்டும் என வலியுறுத்தி தில்லியில் அனைத்து தொழிற்சங்ககள், வட்டார போக்குவரத்து அலுவலர் சங்கங்கள், இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கம், லாரி உரிமையாளர் சங்கங்கள், ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் சங்கங்கள், உதிரிப்பாகங்கள் விற்பனைசெய்பவர்கள் சங்கம், அனைத்துவாகன பழுது நீக்குவோர் சங்கம் என பல ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற கருத்தரங்கம் தில்லியில் 15.2.2018 அன்று நடைபெற்றது.
மனு கொடுத்தல், கருத்தரங்குகள், பிரச்சாரப் பயணம்இக்கருத்தரங்கத்தில் மோட்டார் தொழிலையே கார்ப்பரேட் நிறுவனங்களின் கையில் ஒப்படைத்து,மோட்டார் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி இந்தியா முழுவதும் மீண்டும் ஒரு அகில இந்திய வேலைநிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. வேலைநிறுத்தத்தின் முதல் படியாக மார்ச் 6 ஆம் தேதி அன்றுபிரதமர், போக்குவரத்து அமைச்சர்,மாநில முதல்வர்கள், மாநில போக்குவரத்து அமைச்சர்கள், போக்குவரத்து ஆணையர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மோட் டார் வாகன சட்டத்திருத்தத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்திமகஜர் கொடுப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக அனைத்து மாநிலங்களிலும் மோட்டார் தொழிலாளர்களை இணைத்து மாநில அளவில் மார்ச் 20க்குள் கருத்தரங்கங்களை நடத்துவது என முடிவுஎடுக்கப்பட்டுள்ளது. மேலும் மோட்டார் தொழிலையும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க பிரச்சாரப் பயணங்கள் நடத்துவது, லட்சக்கணக்கான துண்டுப் பிரசுரங்களை வெளியிடுவது என தில்லியில் நடைபெற்ற கருத்தரங்கம் மற்றும் அகில இந்திய சாலைப்போக்குவரத்து சம்மேளன செயற்குழு முடிவு செய் துள்ளது.
மோடி அரசின் முகமூடி கொஞ்சம் கொஞ்சமாக கிழிந்து அம்பலப் பட்டு வரும் நேரம். இதனை மேலும்தீவிரப்படுத்த மோட்டார் தொழிலாளர்கள் களம் காண உள்ளது.மோட்டார் வாகனச் சட்டத் திருத்தம்திரும்பப் பெற வேண்டும் என நடக்கும் போராட்டம் என்பது மோட்டார்தொழிலாளர்கள் வாழ்க்கையை பாதுகாக்கும் போராட்டம் மட்டுமல்ல. இந்திய தேசத்தின் பொதுமக்களின் பொதுப் போக்குவரத்தைபாதுகாக்கும் போராட்டமாகும்.அடுத்த வரும் காலம் தேர்தல்காலமாகும். மோட்டார் தொழிலாளர்கள் நடத்தும் போராட்டம் நிச்சயம் பிரதிபலிக்கும். பொங்கி எழும் மோட்டார் தொழிலாளர்களின் போராட்டமானது, பொய்யை சொல்லியே ஆட்சி நடத்தும் மோடிகட்காரி கூட்டத்தின் ஆட்சிக்கு முடிவுகட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

may 1

சோசலிசம் நீடூழி வாழ்க! இந்தியத் தொழிற்சங்க மையம் (சிஐடியு) மே தின அறிக்கை சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் சர்வதேச ஒருமைப்பாட்டு தினமா...